/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
பந்தலுார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 26, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்தல் தனியார் மண்டபத்தில் நடந்தது.
அதில், சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் வாசித்து அங்கீகரிக்கப்பட்டதுடன், வியாபாரிகள் சங்கம் சார்பில் மேற்கொண்ட பணிகள் குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த தேர்தலுக்கு, வணிகர் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாதுஷா, எருமாடு சங்க தலைவர் அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தலில், தலைவராக அஸ்ரப், செயலாளர் ஆண்டனி, பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

