/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு
/
சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு
சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு
சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு
ADDED : ஜூன் 26, 2024 09:25 PM

ஊட்டி : ஊட்டி நகரின் பிரதான சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பாதசாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி சேரிங்கிராஸ் கோத்தகிரி செல்லும் சாலையில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உழவர் சந்தை செயல்படுகிறது. இச்சாலையை பொதுமக்கள் உட்பட அரசு கலை கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள வங்கி எதிரே கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முழுவதும் சாலையில் தேங்கியுள்ளது.
சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.
அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். அப்பகுதியில் தற்போது பெய்த மழைக்கு கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி இருப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.