/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிக்கடி சாலையில் தேங்கும் கழிவுநீர்: மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
/
அடிக்கடி சாலையில் தேங்கும் கழிவுநீர்: மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
அடிக்கடி சாலையில் தேங்கும் கழிவுநீர்: மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
அடிக்கடி சாலையில் தேங்கும் கழிவுநீர்: மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 15, 2024 12:28 AM
குன்னுார்:குன்னுார், 14வது வார்டு ஸ்டான்லி பார்க் பகுதியில் சாலையில் அடிக்கடி கழிவு நீர் தேங்கி மக்கள் நடமாட முடியாததுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 14 வது வார்டு ஸ்டான்லி பார்க் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு கோழிக்கடை அருகே உள்ள கழிப்பிட கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
இதனால், இங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் இந்த கழிவுகளை மிதித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கழிப்பிட கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால், இந்த கழிவுகள் சாலையில் தேங்கி நிற்கிறது.
சமீபத்தில் தேங்கிய கழிவுநீரை நகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இப்பகுதியில் கழிநீர் தேங்காமல் இருக்க நிரந்தர பணியை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.