/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடைப்பால் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்; கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
அடைப்பால் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்; கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
அடைப்பால் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்; கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
அடைப்பால் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்; கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : மார் 13, 2025 09:25 PM

ஊட்டி; ஊட்டி நகராட்சி பகுதிகளில் மழையின் போது பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவது வாடிக்கையாகி விட்டது.
ஊட்டி நகராட்சியில் , 36 வார்டுகள் உள்ளன. 30 வார்டுகளில் பாதாள சாக்கடை இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் பொருத்தப்பட்ட குழாய்கள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டவை.
சிறிய அளவு கொண்ட குழாய் என்பதால் மழையின் போது கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடையில் பொருத்தப்பட்ட குழாய்கள் அழுத்தம் தாங்காமல் மழைநீருடன் கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
இரு நாட்களாக பெய்த மழையின் போது, மார்க்கெட் எதிரே உள்ள சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர். நகராட்சி ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு வந்து அடைப்பை சரி செய்தனர்.
பொதுமக்கள் கூறுகையில்,'ஊட்டி நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய்கள் அனைத்தும் பல ஆண்டுக்கு முன்பு பொருத்தப்பட்டதால், உடைப்பு ஏற்பட்டதுடன் , சிறிய குழாய்கள் என்பதால் மழையின் போது அழுத்தம் தாங்காமல் கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையாக்கிவிட்டது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பழைய குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.