/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
214 வாக்காளர்கள் பெயர் விடுபட்ட அதிர்ச்சி! ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாக மறியல்
/
214 வாக்காளர்கள் பெயர் விடுபட்ட அதிர்ச்சி! ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாக மறியல்
214 வாக்காளர்கள் பெயர் விடுபட்ட அதிர்ச்சி! ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாக மறியல்
214 வாக்காளர்கள் பெயர் விடுபட்ட அதிர்ச்சி! ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாக மறியல்
UPDATED : ஏப் 20, 2024 07:03 AM
ADDED : ஏப் 20, 2024 12:17 AM

ஊட்டி;ஊட்டி அருகே, தங்காடு ஓரநள்ளி ஓட்டுச்சாவடியில், 214 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி அருகே தங்காடு ஓரநள்ளி, கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள ஓட்டு சாவடிக்கு நேற்று ஓட்டளிக்க சென்றனர். 'வாக்காளர் பட்டியலில், ஆண், பெண் வாக்காளர்கள்,' என,214 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோனல் அதிகாரியிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை. மாவட்ட தேர்தல் அலுவலரை தொடர்பு கொண்டு தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
அதிருப்தியடைந்த வாக்காளர்கள் மாலையில் தங்காடு ஓரநள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த சிவா கூறுகையில், ''வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் நேற்று மாலை வரை தீர்வு கிடைக்கவில்லை. ஜனநாயக கடமையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்டோம்,'' என்றார்.
சிவலிங்கம் (ஆடிட்டர்) கூறுகையில், ''கன்னேரி மந்தனை ஓட்டுசாவடிக்கு வாக்களிக்க சென்ற போது எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. பலரது பெயர்களும் விடுபட்டுள்ளது. ஓட்டளிப்பதன் உரிமையை மறுப்பதன் மூலம் மிகப்பெரிய அநீதி நடந்துள்ளது,'' என்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

