/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குண்டம் இடத்தின் புனிதம் காக்க கையெழுத்து இயக்கம்
/
குண்டம் இடத்தின் புனிதம் காக்க கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 05, 2025 10:10 PM

குன்னுார்; குன்னுாரில் பூ குண்டம் நடக்கும் இடத்தின் புனிதம் காக்கவும், கோவில் இடத்தை நகராட்சிக்கு குத்தகைக்கு விடுவதை தடுக்கவும் வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கியது.
குன்னுாரில் தந்தி மாரியம்மன் கோவில் பூ குண்டம் புனிதத்தை கெடுக்கும் வகையில், இந்து அறநிலைய துறை இடத்தில், நகராட்சியின் தற்காலிக கடைகள் அமைக்க குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில், கையெழுத்து இயக்கம் நேற்று துவங்கியது.
மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், இந்து முன்னணி நிர்வாகிகள் பூகுண்டம் இடத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் மக்களிடம் இருந்து கையெழுத்து இயக்கத்தை துவக்கினர். நிர்வாகிகள் கூறுகையில், ' குன்னுாரில் உள்ள, 30 வார்டுகளிலும் கையெழுத்து பெற்று, மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்படும்,' என்றனர்.