/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் வரி செலுத்தாத ஆறு கட்டடங்களுக்கு 'சீல்'
/
ஊட்டியில் வரி செலுத்தாத ஆறு கட்டடங்களுக்கு 'சீல்'
ADDED : பிப் 24, 2025 10:20 PM

ஊட்டி ; ஊட்டியில் வரி செலுத்தாத, 6 கட்டடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது.
ஊட்டி நகராட்சியில், 20 சதவீதம் பேர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவைத் தொகை செலுத்தாமல் வரி பாக்கி வைத்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி இனங்களை செலுத்தாமல் விட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு உத்தரவின் பேரில் நகராட்சி வருவாய் அலுவலர் அர்ச்சனா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் வரி செலுத்தாத கட்டடங்களுக்கு,'சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி வருவாய் அலுவலர் அர்ச்சனா கூறுகையில்,''ஊட்டி நகராட்சி பகுதியில் போரய்யா என்பவர் கடந்த, 2019ம் ஆண்டு முதல் 32 லட்சம் ரூபாய் வரி செலுத்தாமல் இருந்துள்ளார். இவருக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்கள், வங்கி, காதி கிராப்ட் உள்ளிட்ட,6 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது,''என்றார்.