/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஆறு மாதமாகியும் புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடக்கவில்லை' விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் விரக்தி
/
'ஆறு மாதமாகியும் புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடக்கவில்லை' விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் விரக்தி
'ஆறு மாதமாகியும் புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடக்கவில்லை' விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் விரக்தி
'ஆறு மாதமாகியும் புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடக்கவில்லை' விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் விரக்தி
ADDED : ஜூலை 08, 2024 11:37 PM

சோமனூர்;மனு கொடுத்து ஆறு மாதமாகியும், புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடக்காததால், விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பினர் விரக்தி அடைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை மூலம், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு, விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பெற்று வந்தனர்.
ஒப்பந்தம் போடப்பட்டாலும் முறையான கூலி உயர்வு கிடைக்காத நிலை உள்ளதால், விசைத்தறி தொழில் நெருக்கடிக்குள் உள்ளாகி உள்ளது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போதுமான கூலி உயர்வு இல்லாததால், விசைத்தறியாளர் பலரும் தொழிலை விட்டு செல்லும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சோமனூரில் நடந்தது. தெக்கலூர் பொன்னுசாமி, அவிநாசி முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபாலகிருஷ்னண், பூபதி ஆகியோர் கூறியதாவது:
'கடந்த, ஜன., மாதம், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை, கைத்தறி துணி நூல் துறை அதிகாரிகளிடம், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய கூலி உயர்வு பெற்று தர வேண்டும்,' என, கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஆறு மாதமாகியும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்செயல் நிர்வாகத்தின் மெத்தனத்தை காட்டுகிறது. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த இரு மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சாதா விசைத்தறி தொழில் மற்றும் விசைத்தறியாளர்கள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, ஆண்டுக்கு, 6 சதவீத கட்டண உயர்வில் இருந்து, விசைத்தறி 3ஏ2 டேரிப்புக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும். இதுகுறித்து கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கலெக்டரிடம் மனு
இந்நிலையில், கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று கோவை கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கடந்த, 2022 ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இருந்து, சோமனூர் ரகத்திற்கு, 60 சதவீத கூலி உயர்வும், இதர ரகங்களுக்கு, 50 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். கடந்த, 11 ஆண்டுகளாக, நியாயமான கூலி உயர்வு கொடுக்கப்படாததால் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சட்டபூர்வமாக கூலி உயர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று, கூறப்பட்டுள்ளது.