ADDED : மார் 11, 2025 10:51 PM
குன்னுார்; அரசின், கைவினைஞர் திட்டத்தின் கீழ், ஆடை வடிவமைப்பாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், குன்னுார் புனித அந்தோணியார் தொழில் பயிற்சி நிலையத்தில் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, 'தரம் நிரந்தரம்' என்ற தலைப்பில், நடந்த கருத்தரங்கில் நீலகிரி லஞ்சம் இல்லாத அமைப்பு தலைவர் மனோகரன் பேசுகையில்,''இன்று உலகம் முழுவதும் தரம் குறித்த பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் பொருள்கள் மட்டுமல்லாது சேவைகளிலும் தரம் எதிர்பார்க்கப்படுகிறது.
''எனவே, எல்லாவற்றிலும் தரத்தை உறுதி செய்தால் வாடிக்கையாளர்களை கவர, பயிற்சியாளர்கள் மேற்கொள்ளும் தொழிலில் ஈடுபாடு உணர்வுடன் செயல்பட வேண்டும். இதனால், வாழ்க்கை தரம் உயர்வதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்,'' என்றார்.
ஜேசீஸ் தேசிய பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திரளான பெண்கள் பங்கேற்றனர்.