/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்டில் சிறிய இருக்கை; பயணிகள் அதிருப்தி
/
பஸ் ஸ்டாண்டில் சிறிய இருக்கை; பயணிகள் அதிருப்தி
ADDED : ஏப் 03, 2024 10:26 PM

கூடலுார் : கூடலுார் பஸ் ஸ்டாண்டில் சிறிய இருக்கைகள் வைத்துள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, 5.42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனை, பிப்., மாதம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆனாலும், பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பணிமனையை, புதிய இடத்துக்கு முழுமையாக மாற்றாமல், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர இருக்கை இல்லாததால் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதனால், இருக்கைகள் அமைக்க வலியுறுத்தி வந்தனர், தொடர்ந்து, பயணிகள் அமர்வதற்காக பெயரளவில் சில சிறிய இருக்கைகள் அமைத்துள்ளனர். போதுமான இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
அதிருப்தி அடைந்த பயணிகள் கூறுகையில், 'சமவெளி மற்றும் கேரளாவுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பஸ் இயக்கப்படுகின்றது. இதனால், பயணிகள் நீண்ட நேரம், காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது. அங்கு, போதுமான இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலை தொடர்கிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும்,'

