ADDED : ஆக 05, 2026 07:01 PM
குன்னுார்: ‘தமிழக பட்ஜெட்டில், சிறு தேயிலை விவசாயிகளுக்கான நல திட்ட அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது,’ என, தெரிவிக்கப்பட்டது.
சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன் கூறுகையில்,‘‘சிறு தேயிலை விவசாயிகளுக்கான நல திட்ட அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஐகோர்ட் உத்தரவின்படி, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் (இன்கோ டீ) சிறு தேயிலை விவசாயிகளுக்கு டிச., 2019 வரை வழங்க வேண்டிய பசுந்தேயிலை விலை நிலுவை தொகையான, 52.38 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பயன்பெற, ஊட்டி நகரில் புதிய கழிப்பறைகள்; போதிய பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,’’ என்றார்.
