/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் எஸ்.என்.டி.பி., ஓட்டுகளை பெற போட்டி
/
கூடலுாரில் எஸ்.என்.டி.பி., ஓட்டுகளை பெற போட்டி
ADDED : மார் 28, 2024 11:54 PM
கூடலுார்,;கூடலுார், ஊட்டி, குன்னுார் பகுதிகளில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஈழுவா- தீயா சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர்.
இவர்கள், 35 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி வந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கு, நன்றி செலுத்தும் வகையில், 2021 நடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க.,வுக்கு வாக்களித்தனர்.
வரும் லோக்சபா தேர்தலில், இவர்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.
'அதே நேரம் இந்து மத நம்பிக்கையில் உள்ள, அவர்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், பா.ஜ., களப்பணியை துவங்கி உள்ளனர்.
இதனிடையே, 'கூடலுாரில் அதிகளவில் உள்ள இச்சமூகத்தின் அமைப்பான, எஸ்.என்.டி.பி., இப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காததால் லோக்சபா தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பது,' என, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இதனால், அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுகளை பெறுவதில், அ.தி.மு.க.,- தி.மு.க.,- பா.ஜ.,வினர் போட்டா போட்டியில் உள்ளனர்.

