/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை
/
கோத்தகிரியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை
ADDED : ஆக 29, 2024 02:42 AM
கோத்தகிரி: கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை நடந்தது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான் தலைமை வகித்தார்.
உதவி செயற்பொறியாளர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராஹிம் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவர் சோலை, ஓவேலி, சோலுார், நடுவட்டம், கேத்தி, கீழ்குந்தா, அதிகரட்டி, பிக்கட்டி, ஜெகதளா மற்றும் உலிக்கல் பேரூராட்சிகளின் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில், 'பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது; வீடுகளுக்கு சென்று குப்பைகளை எவ்வாறு சேகரிப்பது; குப்பைகளை வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு வந்து எவ்வாறு தரம் பிரிப்பது; மட்கும் குப்பைகளை உரமாக்குவது, மட்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சிக்கு உட்படுத்துவது,' என்பன குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பொது கழிப்பிடங்களை எவ்வாறு முறையாக பராமரிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

