/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நெல்லியாம்பதி அருவிகளில் வெள்ளம்
/
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நெல்லியாம்பதி அருவிகளில் வெள்ளம்
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நெல்லியாம்பதி அருவிகளில் வெள்ளம்
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நெல்லியாம்பதி அருவிகளில் வெள்ளம்
ADDED : ஜூன் 26, 2024 10:29 PM
பாலக்காடு: தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், நெல்லியாம்பதி மலைகளில் உள்ள நீர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி சுற்றுலா தலம். இங்கு சமீப நாட்களாக, தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதனால், அப்பகுதி மலைகளில் உள்ள அருவிகளில், தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. போத்துண்டியில் இருந்து நெல்லியாம்பதி மலை பாதையில், சிறிய, பெரிய அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மூடுபனி மற்றும் நீர் வீழ்ச்சியை காண வரும், சுற்றுலா பயணியரின் கூட்டம் அதிகரித்துள்ளது. போத்துண்டி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள, 107 அடியில், 11.5 அடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே சமயத்தில், அரை அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. கடந்த நாட்களில், 2,500க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணியரின் வாகனங்கள் நெல்லியாம்பதிக்கு வந்துள்ளன. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அங்கு இறங்குவதற்கும், குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நெல்லியாம்பதி பாதையில், வனத்துறையினர் தலைமையில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.