/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் வாகனங்கள் ஆய்வு குறைகளை கேட்ட எஸ்.பி., போலீசாரிடம் குறைகளை கேட்ட எஸ்.பி.,

ADDED : ஆக 26, 2024 01:58 AM
ஊட்டி;ஊட்டியில் போலீஸ் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, போலீசாரிடம் எஸ்.பி., குறைகளை கேட்டார்.
நீலகிரி மாவட்ட போலீசில் அனைத்து வகையான போலீஸ் வாகனங்களின் பராமரிப்புகள் குறித்து எஸ்.பி., நிஷா தலைமையில், ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நேரடி ஆய்வு நடந்தது.
போலீசார் பயன்படுத்தும் கார், ஜீப், வேன்கள், அதிரடிப்படை அவசர ஊர்திகள், பைக்குகள் உட்பட சுமார் , 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மைதானத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டது.
ஒவ்வொரு போலீஸ் வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் பராமரிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி., நிஷா, போலீசாருக்கு வாகனங்கள் பராமரிப்பு குறித்து அறிவுரை வழங்கினார்.
பேரிடர் காலங்களில் போலீஸ் ரோந்து வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களிடம் தனி தனியாக குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் தங்கவேல், சவுந்தரராஜன், ஆயுத படை பிரிவு டி.எஸ்.பி., சரவணன், மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி., பாஸ்கர், சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., முத்தரசு உட்பட பலர் பங்கேற்றனர்.