/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சி.எஸ்.ஐ., கல்லுாரியில் தமிழ் மன்ற சிறப்பு விழா
/
சி.எஸ்.ஐ., கல்லுாரியில் தமிழ் மன்ற சிறப்பு விழா
ADDED : ஏப் 18, 2024 11:25 PM
குன்னுார்;குன்னுார் சி.எஸ் .ஐ., பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்ற சிறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் பர்வீன் சுல்தானா பங்கேற்று பேசுகையில், ''பள்ளியில் படிக்கும் போது, மாணவர்களை கல்வி, ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்டவர்களாக இருப்பர். கல்லுாரி வந்த பிறகு அவர்கள் கல்லுாரி நிர்வாகத்தின் மூலம் ஒரு சிறந்த குடிமகனாக ஆக்கப்படுகிறார்,'' என்றார்.
கல்லுாரி தாளாளர் காட்வின் டேனியல் வரவேற்றார். இயக்குனர் முனைவர் அருமைராஜ் பேசினார். கல்லுாரி நுாலகர் ராஜ்குமார் கவிதை வாசித்தார். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மகிழ்ச்சியாக இருப்பது, '90 கிட்ஸ்; 2 கே கிட்ஸ்' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. நடுவராக பர்வீன் சுல்தானா பங்கேற்றார்.
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கலந்துரையாடல் மற்றும் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி மாணவி வரைந்த ஓவியம் சிறப்பு விருந்தினருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
குன்னுார் சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரியில் தமிழ் மன்ற சிறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முனைவர் பர்வீனா சுல்தானாவுக்கு கல்லுாரி மாணவி வரைந்த ஓவியம் பரிசாக வழங்கப்பட்டது.

