/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமையல் எரிவாயு சிக்கனம் மகளிருக்கு சிறப்பு பயிற்சி
/
சமையல் எரிவாயு சிக்கனம் மகளிருக்கு சிறப்பு பயிற்சி
சமையல் எரிவாயு சிக்கனம் மகளிருக்கு சிறப்பு பயிற்சி
சமையல் எரிவாயு சிக்கனம் மகளிருக்கு சிறப்பு பயிற்சி
ADDED : மே 29, 2024 10:20 PM
பந்தலுார்:
பந்தலுார் அருகே உப்பட்டி இலவச மகளிர் தையல் பயிற்சி மையத்தில், கூடலுார் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் உட்பட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
தையல் பயிற்சி மைய ஆசிரியர் சுலோச்சனா வரவேற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''எரிவாயு சிலிண்டர் பயன்பாடு மிகவும் அவசியமாக இருந்தாலும், பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பயன்படுத்தும் நேரங்களில் கசிவுகள் மற்றும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். ஈரமான சாக்குபைகளை சிலிண்டர் மீது போட வேண்டும்,'' என்றார்.
எரிவாயு நிறுவன வல்லுனர்கள் ஜோசப் மற்றும் கவின் பேசுகையில், ''சிலிண்டர்களில் கசிவுகள் மற்றும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் எரிவாயு முகமை அலுவலர் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை எரிவாயு குழாய்களை பரிசோதனை செய்வதுடன், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி பொருத்த வேண்டும். அதேபோல் தரமான உதிரிபாகங்களை வாங்கி பயன்படுத்துவதும் அவசியம்,'' என்றனர்.
தொடர்ந்து, சிக்கனமாக எரிவாயு பயன்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மைய மாணவிகள் பங்கேற்றனர்.