/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் பாறு கழுகு கணக்கெடுப்பு வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி
/
முதுமலையில் பாறு கழுகு கணக்கெடுப்பு வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி
முதுமலையில் பாறு கழுகு கணக்கெடுப்பு வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி
முதுமலையில் பாறு கழுகு கணக்கெடுப்பு வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : பிப் 27, 2025 10:04 PM

கூடலுார், பிப். 28-
முதுமலை, மசினகுடி பகுதியில் இரு நாட்கள் நடக்கும் ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு குறித்து, வன ஊழியர்கள்; தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
'வனத்தின் துாய்மை பணியாளர்' என்று அழைக்கப்படும் பாறு கழுகுகள் பெருமளவில் அழிந்துவிட்டன. தற்போது, நீலகிரி முதுமலை மற்றும் மசினகுடி மாயார் பள்ளத்தாக்கு; அதனை ஒட்டிய சத்தியமங்கலம் பகுதிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் கழுகுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இப்பணியில், ஈடுபடும் வன ஊழியர்கள்; தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் முதுமலை தெப்பக்காடு, மசினகுடி பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்தது.
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த பயிற்சி முகாமுக்கு, முதுமலை கள இயக்குனர் கிருபா சங்கர் தலைமை வகித்தார். துணை இயக்குனர் வித்யா பங்கேற்று கணக்கெடுப்பு பணிகள் குறித்து பேசினர்.
கணக்கெடுப்பு குறித்து, பயிற்றுனர்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர். மசினகுடி கோட்டத்துக்கான பயிற்சி முகாம், லாக் ஹவுஸ் பகுதியில் நடந்தது. துணை இயக்குனர் அருண்குமார் தலைமை வைத்தார். கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் செல்ல உள்ள பகுதிகள்; கணக்கெடுப்பு பணியை பதிவு செய்யும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

