ADDED : ஜூலை 09, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் நந்தட்டி அருகே அமைக்கப்பட்ட வேகத்தடை அகற்றப்பட்டது.
கூடலுார் நந்தட்டி - பள்ளிபடி இடைப்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில், கோழிக்கோடு சாலை நடுவே, மே மாதம், 22ம் தேதி புதிய வேகத்தடை அமைக்கபட்டது. இதனால், பாதிப்பு அடைந்த வாகன ஓட்டுனர்கள், ‘தேவையின்றி இப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. அதனை அகற்ற வேண்டும்,’ என, வலியுறுத்தினர். இதனை ஏற்று, அப்பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வேகத்தடையை நெடுஞ்சாலை ஊழியர்கள் அகற்றினர்.
