/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி--ஊட்டி சாலையில் வேகத்தடை; அகற்றப்பட்டதால் விபத்து அபாயம்
/
கோத்தகிரி--ஊட்டி சாலையில் வேகத்தடை; அகற்றப்பட்டதால் விபத்து அபாயம்
கோத்தகிரி--ஊட்டி சாலையில் வேகத்தடை; அகற்றப்பட்டதால் விபத்து அபாயம்
கோத்தகிரி--ஊட்டி சாலையில் வேகத்தடை; அகற்றப்பட்டதால் விபத்து அபாயம்
ADDED : டிச 11, 2024 09:26 PM
கோத்தகிரி; கோத்தகிரி- ஊட்டி இடையே சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரியில் இருந்து, ஊட்டி மற்றும் குன்னுார் செல்லும் சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலை வளைவுகளும் விரிவுபடுத்தப்பட்டு, தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்து, சாலையோர அபாய மரங்கள் அகற்றப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஜனாதிபதி வருகையை தொடர்ந்து, கோத்தகிரி- ஊட்டி இடையே, சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.
கடந்த, ஐந்து நாட்களுக்கு முன்பு, கோத்தகிரி ஒர சோலை பகுதியில், அரசு பஸ் டயரில் சிக்கி, பெண் தொழிலாளி பலியான சம்பவம் நடந்துள்ளது. ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, சாலைமறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
எனவே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பள்ளி வளாகம், அரவேனு மற்றும் கட்டபெட்டு பஜார் உள்ளிட்ட பகுதிகளில், அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க நடவடிக்கை வேண்டும்.