/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விளையாட்டு போட்டி குழந்தைகளுக்கு பரிசு
/
விளையாட்டு போட்டி குழந்தைகளுக்கு பரிசு
ADDED : செப் 10, 2024 02:51 AM

குன்னுார்:குன்னுார் அருகே, மேலுார் ஒசஹட்டியில் சுவாமி விவேகானந்தா விளையாட்டு மன்றம் சார்பில், 38ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விளையாட்டு மற்றும் கலை போட்டிகள் நடந்தது.
ஊர் தலைவர் ஆல்துரை தலைமை போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் சாதித்த மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை மன்ற பொறுப்பாளர் பிரசாந்த் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிர்வாகி நஞ்சுண்டன் நன்றி கூறினார்.

