/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ மூவுலகரசி அம்மன் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : மே 06, 2024 10:54 PM

ஊட்டி:ஊட்டி காந்தள் பழமை வாய்ந்த ஸ்ரீ மூவுலகரசி அம்மன் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் இவ்விழா, கடந்த, 21ம் தேதி காப்பு கட்டு பூஜையுடன் துவங்கியது.
நாள்தோறும் ஒவ்வொரு உபயதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன், அம்மன் திருவீதி உலா நடந்தது.
சென்டைமேளம் முழங்க அம்மன் ஊர்வலம், ஆடல் பாடல், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீ மூவுலகரசி அம்மன் வெள்ளை ஆடை அலங்காரத்தில், கோவிலில் இருந்து, திருத்தேர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று விடியற்காலை கோவிலை அடைந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில், காந்தள் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 30 கிராம மக்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.