/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஏப் 29, 2024 01:27 AM

கூடலுார்;;கூடலுார் கோழிப்பாலம் ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கூடலுார் கோழிப்பாலம் ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 6:00 மணிக்கு உஷ பூஜை, பரிவார பூஜை, கலசபிஷேகம், மத்திய பூஜை நடந்தது.
மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6:00 மணிக்கு தீபாதாரணை, 7:00 மணிக்கு கலசாபிஷேகம், அத்தாழ பூஜை நடந்தது.
நேற்று, காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு உஷ பூஜை, 7:00 மணிக்கு பிரமகலாபிஷேகம் மற்றும் பரிகலாசபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் அறக்கட்டளை செய்திருந்தது.

