/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 23, 2024 02:27 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தில் நேற்று, ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேதஸ்ரீ, ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில், ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேதஸ்ரீ, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து நேற்றுக்காலை, 7 மணிக்கு யாக பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக சென்றன. காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்கள் மீது ட்ரோன் வாயிலாக பூக்களும், பக்தர்கள் மீது புனித நீரும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, தச தரிசனம் திருவாராதணம், வேத அலங்கார தரிசனம், நிகழ்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருடவாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா நடைபெற்றது. காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி வேங்கடாத்ரி, வேதவியாச வெங்கடேசபட்டர் சாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

