/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்வெட்டில் மாநில, தேசிய சின்னங்கள்: பூங்காவில் சுற்றுலா பயணிகள் ரசிப்பு சுற்றுலா பயணிகள் ரசிப்பு

ADDED : ஏப் 23, 2024 10:15 PM

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கல்வெட்டில் பதியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட மாநில, தேசிய சின்னங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டு தோறும் சராசரியாக, 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு மலர் கண்காட்சி மே, 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது.
மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து, 'இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லுாபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுனியா,' போன்ற, 60 வகை மலர் விதைகள் வரவழைக்கப்பட்டு மலர்கள் தயாராகி வருகிறது. தவிர, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
மேலும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில், 'சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, லில்லி, ஆலந்துாரியம்,' போன்ற, 30 வகை மலர் செடிகளை நடவு செய்யப்பட்டு மலர்கள் பூக்க துவங்கியுள்ளது.
மாநில, தேசிய சின்னங்கள்
பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில சின்னங்களான, செங்காந்தள் மலர், பனைமரம், பலாபழம் தேசிய சின்னங்களான ஆலமரம், மாம்பழம், தாமரை ஆகியவை கல்வெட்டு மூலம் பதியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் கூறுகையில், ''நடப்பாண்டு மலர் கண்காட்சி மே, 17ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது. பூங்கா முழுவதும் பல்வேறு ரகங்களில், 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் பூக்க துவங்கியுள்ளது. பராமரிப்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது,'' என்றார்.