/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில நல்லாசிரியர் விருது; நீலகிரியில் ஒன்பது பேர் தேர்வு
/
மாநில நல்லாசிரியர் விருது; நீலகிரியில் ஒன்பது பேர் தேர்வு
மாநில நல்லாசிரியர் விருது; நீலகிரியில் ஒன்பது பேர் தேர்வு
மாநில நல்லாசிரியர் விருது; நீலகிரியில் ஒன்பது பேர் தேர்வு
ADDED : செப் 04, 2024 11:11 PM
ஊட்டி : நீலகிரியில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு, 9 பேர் தேர்வாகி உள்ளனர்.
ஆண்டுதோறும் செப்., 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியருக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி, மாநில அரசு கவுரவப்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விருது பெற உள்ளனர்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், கணேஷ், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி தும்மனட்டி; சரவணகுமார், முதுகலை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி கோத்தகிரி; கீதா, பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெட்டட்டி; சபிதா, இடைநிலை ஆசிரியர், அரசு ஆரம்பபள்ளி, குந்தா கேம்ப் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
மேலும், புஷ்பா, பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோகத்தொரை; எலிசபெத், தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நெடுகுளா; மீரா, தலைமையாசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி, பிதர்காடு; கமலாம்பிகை, பட்டதாரி ஆசிரியை, அரசு உயர்நிலைப்பள்ளி அம்பலவயல். சுமித்ரா, ஹில்போர்ட் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.