/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராஜாவை தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும்: இணை அமைச்சர் முருகன் பேச்சு
/
ராஜாவை தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும்: இணை அமைச்சர் முருகன் பேச்சு
ராஜாவை தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும்: இணை அமைச்சர் முருகன் பேச்சு
ராஜாவை தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும்: இணை அமைச்சர் முருகன் பேச்சு
ADDED : மார் 29, 2024 12:25 AM

ஊட்டி;''ராஜாவை தோற்கடிக்க நீலகிரி மக்கள் தயாராக வேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நீலகிரி பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
அதில், நீலகிரி லோக்சபா தொகுதி வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான முருகன் பேசியதாவது:
கடந்த, 2009ம் ஆண்டில் எம்.பி.,யாக ராஜாவை தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால், தொகுதிக்கான எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை. எம்.பி., ராஜா , ஹந்துக்களை இழிவுப்படுத்தி கொண்டு ஓட்டுக்காக ஹெத்தையம்மன் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தியுள்ளார். ராஜாவை தோற்கடிக்க நீலகிரி மக்கள் தயாராக வேண்டும். தி.மு.க., தேர்தல் பிரசாரத்தின் போது, மகளிருக்கு உரிமை தொகை தருவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால், 3 கோடி பேரை தள்ளுபடி செய்துவிட்டு, சொற்ப அளவிலான மகளிருக்கு மட்டும் வழங்கியுள்ளனர். தி.மு.க., அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாக உள்ளது. பா.ஜ., சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறது. நான் வெற்றிபெற்ற பின், ஊட்டியை சர்வதேச சுற்றுலா தலமாக கொண்டு வந்து வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு, முருகன் பேசினார். தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்தமேனன், பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

