ADDED : மே 29, 2026 02:20 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னூர் ஸ்டான்லி பார்க்கில் உள்ள, மாநில பயிற்சி மையத்தில், பாரத சாரணியர் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான, ‘மேம்பட்ட வழிகாட்டிகள்’ பயிற்சி முகாம் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற இம்முகாமில், உலக பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்கள் சங்கத்தின் சார்பில், முதலுதவி, கூடாரம் அமைத்தல், வரைபடம் மற்றும் பல்வேறு கயிறு முடிச்சு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
முகாமை, வழிநடத்திய பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு, நீலகிரி முதன்மை கல்வி அலுவலர் சான்றிதழ்கள் வழங்கினார். மாநில பயிற்சி ஆணையர் தேன்மொழி, மாநில அமைப்பு ஆணையர் கோமதி, பயிற்றுநர்கள் மஞ்சுளா, அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
