/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெலிங்டனில் மாநில சிலம்பம் போட்டி; பதக்கம் வழங்கிய எம்.ஆர்.சி., கமாண்டன்ட்
/
வெலிங்டனில் மாநில சிலம்பம் போட்டி; பதக்கம் வழங்கிய எம்.ஆர்.சி., கமாண்டன்ட்
வெலிங்டனில் மாநில சிலம்பம் போட்டி; பதக்கம் வழங்கிய எம்.ஆர்.சி., கமாண்டன்ட்
வெலிங்டனில் மாநில சிலம்பம் போட்டி; பதக்கம் வழங்கிய எம்.ஆர்.சி., கமாண்டன்ட்
ADDED : மார் 04, 2025 11:17 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டனில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், 1,272 பேர் பங்கேற்றனர்.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் மைதானத்தில், இந்திய இளைஞர் விளையாட்டு சிலம்பம் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட, உலக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின், சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கம் சார்பில், மாநில சிலம்பம் போட்டி நடந்தது.
இந்த போட்டியில், தமிழகம், புதுச்சேரியில் இருந்து, 1,272 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, மான் கொம்பு, வேல் வீச்சு, வாள் வீச்சு, சுருள்வாள், செடிக்குச்சி, தொடு முறை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்.ஆர்.சி.,) கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்துதாஸ், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே, வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் ஆகியோர், வெற்றி, பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இந்த குழுவினர், டில்லியில் மே மாதம் நடக்கும், தேசியளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். பங்குபெற்ற சிலம்ப மாஸ்டர்களுக்கு நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் கோவர்த்தனன் மற்றும் சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்க, மாவட்ட செயலாளர் நெடுமாறன் இளவரசன் செய்திருந்தார்.