sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை


ADDED : மே 16, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2024 06:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார், : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்பலபாடி கிராமம் அமைந்துள்ளது.

இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தண்ணீர் குறைவாக உள்ளதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு குடிநீர் திறப்பதற்கு முறையாக ஆள் நியமிக்காத நிலையில், கடந்த, 5 நாட்களாக குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, காலி குடங்களுடன் சென்றனர்.

தகவலறிந்த தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ., அசோக்குமார் ஆகியோர் வந்து, பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சற்குணசீலன், ஜோஸ் குட்டி ஆகியோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில், 'குடிநீர் திறப்பதற்கு உள்ள தடையை நீக்கி, குடிநீர் கிணறு மற்றும் தொட்டிகளை சுத்தப்படுத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us