/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீசிய சூறை காற்று அரசு பள்ளி கூரை சேதம்
/
வீசிய சூறை காற்று அரசு பள்ளி கூரை சேதம்
ADDED : ஜூலை 29, 2024 11:41 PM
கோத்தகிரி;கோத்திக்கிரி அருகே அரசு பள்ளி கூரை சூறைக்காற்றில் சேதம் அடைந்தது.
கோத்தகிரி கோடநாடு சாலையில், ஈளாடா பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 25க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்று தீவிரமடைந்தது. அதில், பள்ளி மேற் கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகரங்கள் காற்றில் பறந்தன.
மேலும், சில தகரங்கள் தொங்கியவாறு, மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளன. இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சோழா மகேஷ், கோடநாடு ஊராட்சி தலைவர் சிப்பி காரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, மேற்கூறையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.