ADDED : பிப் 28, 2025 10:22 PM

கூடலுார், ; கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகள் சமீபத்தில் அகற்றப்பட்டன. 'வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கடைகள் வைக்க, நிரந்தர இடம் வழங்க வேண்டும்,' என, நடைபாதை வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., நடைபாதை வியாபாரி சங்கம் சார்பில் கூடலுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைப்பாளர் புட்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ஜபருல்லா, நிர்வாகிகள் நாகராஜ், பரமேஸ்வரி, நாகரத்தினம், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் முகமது கனி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
பழங்குடி சங்கத்தின், மாநில துணை தலைவர் பி.குணசேகரன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் கோரிக்கை குறித்து பேசினர். பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், முருகன், வக்கீல்கள் செவ்விளம்பரதி, சசிகலாதேவி பங்கேற்றனர். சந்திரமதி நன்றி கூறினார்.