/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரசாயன கல் மாம்பழங்கள் விற்றால் கடும் நடவடிக்கை
/
ரசாயன கல் மாம்பழங்கள் விற்றால் கடும் நடவடிக்கை
ADDED : மே 01, 2024 12:44 AM

ஊட்டி:'ரசாயன கல் மாம்பழங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது.
இவைகளை, ஊட்டி மார்க்கெட், உழவர் சந்தை, தள்ளூ வண்டி, நடைபாதை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 'மாம்பழங்கள் சுகாதாரமற்ற முறையில் ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைப்பதை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ''ஊட்டியை பொறுத்தவரை மாம்பழம் குடோன் இல்லை. விதிமீறி எங்கேயாவது செயல்படுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறோம்.
''ரசாயன கல் மாம்பழங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.