ADDED : மே 31, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம்நெம்மாரா சக்காத்தரை பகுதியைச் சேர்ந்த ராமன் - அம்பிகா தம்பதியரின் மகள் ராஜேஸ்வரி, 13. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த மாதம் 14ம் தேதி மதியம், ராஜேஸ்வரி தனது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த நல்ல பாம்பு அவரை கடித்துள்ளது. சுயநினைவின்றி மயங்கிக்கிடந்தவளை மீட்டு, நெம்மாரா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆலத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
