ADDED : மே 31, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு தென்கரை வாளக்கரை பகுதியைச் சேர்ந்த சதீஷன்- ரிதா தம்பதியரின் மகன் அக்ஷய், 18. பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் சேர இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், அக்ஷய் தனது வீட்டின் அருகே உள்ள குளத்திற்கு, நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச்சென்றுள்ளார். அப்போது அக்ஷய் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனைப்பார்த்த அவரது நண்பர்களும், சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்களும் குளத்தில் இறங்கி அக்ஷயை மீட்டனர். தொடர்ந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மண்ணார்க்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
