/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாணவர்களின் பங்களிப்பு முக்கியம் பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
/
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாணவர்களின் பங்களிப்பு முக்கியம் பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாணவர்களின் பங்களிப்பு முக்கியம் பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாணவர்களின் பங்களிப்பு முக்கியம் பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை
ADDED : பிப் 23, 2025 11:36 PM

பந்தலுார்;
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில், 'ஸ்ருஷ்டி-2,கே25' எனும் தலைப்பில் பள்ளியின், 18வது ஆண்டு விழா நடந்தது.
விழா அரங்கிற்கு வந்த பெற்றோர்களுக்கு பன்னீர் தெளித்து, குங்குமம் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களின் இறைவணக்கம், விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி துணை தாளாளர் மனோஜ் குமார் வரவேற்றார்.
பி.டி.ஏ., தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் அன்பரசி தனராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
நிகழ்ச்சியை தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் துவக்கி வைத்து பேசுகையில், ''மாணவர்கள் கல்வி கற்பதில் முக்கியத்துவம் காட்டும் அதே வேளையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை எவ்வாறு வழங்குவது என்பதையும் ஆலோசித்து, அதற்கேற்ப கல்வியும், நாட்டின் வளர்ச்சியும் இரு கண்களாக நினைத்து படிக்க வேண்டும்.
தற்போது, வளரும் நம் நாடு, வளர்ந்த நாடாக மாறுவதில், இளையோர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இளைய தலைமுறையினர் தேசப்பற்றுடன் கூடிய கல்வியை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்,''என்றார்.
விவேகானந்தா கல்வி குழும இணைச் செயலாளர் ராமமூர்த்தி பேசுகையில், ''கல்வி வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மட்டும் கருத்தில் கொண்டு, இந்தியாவின் கலாசாரத்தை விட்டு விடக்கூடாது.
அதனை பறைசாற்றும் வகையில் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள், கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளது வரவேற்கக் கூடியதாக உள்ளது,'' என்றார்.
எம்.எல்.ஏ., ஜெயசீலன் பேசுகையில், ''மாணவர்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும், கல்வி கற்பதை மட்டும் கைவிடக்கூடாது. எதிர்காலத்தில் நம்மை வாழ வைப்பது கல்வி மட்டும் தான்,'' என்றார்.
தொடர்ந்து மாணவர்களின் வண்ணமயமான கலை நிகிழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், நாட்டின் அனைத்து மாநில மொழிகளிலும் தேசப்பற்று பாடலை 'பாரதகானம்' எனும் தலைப்பில் மாணவிகள் பாடியது அனைவரையும் கவர்ந்தது.
துணை முதல்வர் ரேணுகா நன்றி கூறினார்.

