/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருள் வேண்டாம் மாணவர்கள் உறுதிமொழி
/
போதை பொருள் வேண்டாம் மாணவர்கள் உறுதிமொழி
ADDED : ஆக 09, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:பந்தலுார் கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், போதை பொருள் ஒழிப்பு மன்றம் இணைந்து, புத்திலிபாய் தின நிகழ்ச்சியை நடத்தின.
பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காந்தியின் வாழ்க்கை முறை; அவர் தாயாருக்கு செய்து கொடுத்த சத்தியம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பேசப்பட்டது.
'உடலுக்கு தீங்கான போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்,' என, பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
ஆசிரியர் மணிவாசகம் தலைமையில், ஆசிரியர்கள் மார்கிரேட் மேரி, நிரோஷா, மேகலா நிஷாத் உள்ளிட்ட மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.