/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதை உற்பத்தி முன்னோடி நிறுவனங்களுக்கான ஆய்வு கூட்டம்
/
விதை உற்பத்தி முன்னோடி நிறுவனங்களுக்கான ஆய்வு கூட்டம்
விதை உற்பத்தி முன்னோடி நிறுவனங்களுக்கான ஆய்வு கூட்டம்
விதை உற்பத்தி முன்னோடி நிறுவனங்களுக்கான ஆய்வு கூட்டம்
ADDED : செப் 17, 2024 05:25 AM
ஊட்டி: ஊட்டியில் விதை உற்பத்தி செய்யும் முன்னோடி நிறுவனங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதை நிறுவனங்களும், மலை காய்கறிகளான கேரட் மற்றும் பீட்ரூட் விதைகளை, கலப்படம் மற்றும் தட்டுப்பாடு இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு, அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
தோட்டக்கலை மற்றும் என்.சி.எம்.எஸ்., மூலமாக, தனியார் விதை நிறுவனங்களிடம் இருந்து, கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அத்துடன், தோட்டக்கலைத்துறை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, குறும் படங்களாக தயார் செய்து, விவசாயிகள் பயன் பெற வெளியிட வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் விற்பனையாகும் கேரட் மற்றும் பீட்ரூட் விதைகளின் கொள் கலனை ஒரே மாதிரியாக செய்து விற்பனை செய்ய வேண்டும்.
தோட்டக்கலை பயிர்களின் விதைகளை உற்பத்தி செய்வது தொடர்பாக, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை விவசாயிகள் அணுகும் வகையில், தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
விதை ஆய்வு துணை இயக்குனர் சுந்தரவடிவேல், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) அனிதா மற்றும் விதை பரிசோதனை அலுவலர் நர்கீஸ் உட்பட, பலர் பங்கேற்றனர்.