/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் 300 அபாய மரங்கள் அகற்றம்; பொதுமக்கள் மனுக்கள் மீது ஆய்வு
/
மாவட்டத்தில் 300 அபாய மரங்கள் அகற்றம்; பொதுமக்கள் மனுக்கள் மீது ஆய்வு
மாவட்டத்தில் 300 அபாய மரங்கள் அகற்றம்; பொதுமக்கள் மனுக்கள் மீது ஆய்வு
மாவட்டத்தில் 300 அபாய மரங்கள் அகற்றம்; பொதுமக்கள் மனுக்கள் மீது ஆய்வு
ADDED : ஆக 10, 2024 02:15 AM

ஊட்டி;மாவட்டத்தில் பலத்த காற்றுக்கு விழுந்த மரங்களில் இதுவரை, 300 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மூன்று வாரம் கன மழை பெய்தது. கனமழையுடன் வீசிய பலத்த காற்றுக்கு ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் தாலுகா பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட முழுவதும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த பெரிய அளவிலான கற்பூர மரங்கள் விழுந்ததால் தீயணைப்பு, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே 'பவர்ஷா' உதவியுடன் மரங்களை அறுத்து பொக்லைன் உதவியுடன் அகற்றினர். இதில், மாவட்டம் முழுவதும், 300 மரங்கள் இதுவரை அகற்றியுள்ளனர்.
தொடர்ந்து, மாவட்ட நிர்வாக அறிவிப்பில், 'குடியிருப்பு, பள்ளி, கல்லுாரி மற்றும் சாலையோர அபாயகரமான மரங்கள் குறித்து பொது மக்கள் மனு அளிக்கலாம்,' என, தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த மூன்று வாரங்களாக வருவாய் துறைக்கு, நுாற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் மரங்களை அகற்ற கோரி வந்துள்ளன. சம்மந்தப்பட்ட வருவாய் துறையினர் மனுக்கள் குறித்து அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அபாயகரமான மரங்கள் அகற்றுவது குறித்து, அரசு கல்லுாரி அருகே வாழும் மக்கள் மற்றும் மாவட்ட முழுவதும், நுாற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் தனியாருக்கு டெண்டர் விட்டு மரங்கள் அகற்றப்படும்,' என்றனர்.