தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மானிய விலையில் இடுபொருள்கள், விதைகள்

மானிய விலையில் இடுபொருள்கள், விதைகள்

மானிய விலையில் இடுபொருள்கள், விதைகள்


ADDED : மே 24, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம் : மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள, வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கு தேவையான விதைகள், இடுபொருள்கள் தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்து திட்டத்தின் படி விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.

நடப்பு கோடை பருவம் மற்றும் சித்திரை பட்டத்திற்கு தேவையான நுண்ணுாட்டக் கலவைகள், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள், பயிறு வகை நிலக்கடலை மற்றும் சிறுதானிய விதைகள் மானிய விலையில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது. தற்போது, தட்டைப்பயிறு, உளுந்து ஆகிய விதைகள் இருப்பில் உள்ளன.

மானிய விலையில் வழங்கப்படும் மக்கிய தொழு உரங்களுடன் கலந்து கடைசி உழவில் இடுவதால், பயிர்களை தாக்கும் அழுகல், தண்டழுகல் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

விதைப்பதற்கு முன்பு விதைகளை அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களுடன் ஆறிய அரிசி கஞ்சியினை கலந்து, விதை நேர்த்தி செய்து, 30 நிமிடம் கலந்து பின்னர் விதைக்கலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலர் கோமதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் விஜய கோபால் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us