/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்ற மானியம்
/
தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்ற மானியம்
ADDED : ஜூலை 05, 2024 01:53 AM
மேட்டுப்பாளையம்:தரிசு நிலங்களை விளைநிலமாக கொண்டு வர விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
காரமடை அருகே தோலம்பாளையத்தில், கிராம வேளாண் வளர்ச்சிக்குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) புனிதா முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, பட்டு வளர்ச்சி, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு நடப்பாண்டில் செயலாகத்தில் உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து மரக்கன்றுகள் வளர்ப்பு, வேளாண் காடுகளின் அவசியம் குறித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி இணை பேராசிரியர் சிவப்பிரகாசம் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், காரமடை வட்டார வேளாண் துறை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி பேசுகையில், 'அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நிலங்களை, விளைநிலங்களாக கொண்டு வர மானியம் வழங்கப்படுகிறது. தனிநபர் விவசாயிகள் 2 முதல் 5 வருடம் தரிசாக உள்ள நிலங்களில் முட்புதர்களை அகற்றி விளைநிலங்களாக கொண்டு வர ஒரு ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியமாக வழங்கப்படுகிறது,' என்றார்.