/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெற்றி பெற்ற மாணவர்கள் சுற்றுலா செல்ல வாய்ப்பு
/
வெற்றி பெற்ற மாணவர்கள் சுற்றுலா செல்ல வாய்ப்பு
ADDED : ஜூலை 17, 2024 11:43 PM

கூடலுார் : நீலகிரி மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் இடையே துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இதில், 1,474 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர் எழுதினர்.
தேர்வு முடிவுகள், கூடலுார் புளியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி நடந்த கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார். துளிர் திறன் அறிதல் தேர்வு முடிவுகளை, கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் வெளியிட்டு, வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து நடந்த, நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களிடையே நடந்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அறிவியல் இயக்க நிர்வாகிகள் கூறுகையில், 'துளிர் திறனறிவு தேர்வில், வெற்றி பெற்ற மாணவர்கள் கோவை ஜி.டி., நாயுடு அறிவியல் ஆய்வகத்துக்கு இரண்டு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்,' என்றனர்.
நிகழ்ச்சியில், துளிர் திறன் அறிதல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் உட்பட பங்கேற்றனர்.