தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆக்கிரமிக்கப்பட்ட மயான நிலம் மீட்பதில் ஏற்பட்ட திடீர் சிக்கல்

ஆக்கிரமிக்கப்பட்ட மயான நிலம் மீட்பதில் ஏற்பட்ட திடீர் சிக்கல்

ஆக்கிரமிக்கப்பட்ட மயான நிலம் மீட்பதில் ஏற்பட்ட திடீர் சிக்கல்


ADDED : செப் 13, 2024 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2024 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார் : பந்தலுார் எருமாடு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மயான நிலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பந்தலுார் அருகே எருமாடு பகுதியில். கோட்டூர் என்ற இடத்தில், 85 சென்ட் மயான நிலத்தை, பஷீர் என்பவர் ஆக்கிரமித்து, தேயிலை, குறுமிளகு உள்ளிட்ட விவசாய பயிர்களை பயிரிட்டு அனுபவித்து வந்துள்ளார்.

இந்த நிலம் வருவாய்த்துறை பதிவேட்டில் மயான நிலம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், 'இதனை மக்கள் பயன்படுத்தும் வகையில் மீட்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து. கடந்த, 2012 ஆம் ஆண்டு இந்த நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர் நீதிமன்றம் சென்றதால், ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படி, நேற்று வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ.,க்கள் யுவராஜ், ஷீஜா, ராஜேந்திரன், நில அளவையர் செந்தில் கண்ணன், உதவியாளர்கள் சிவா உள்ளிட்ட குழுவினர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு நிலத்தை நில அளவை செய்து மீட்டனர். அங்கு அரசு நிலம் என்பதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

அப்போது அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர் பஷீர், அவரின் சகோதரர் அப்துல் சலாம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஹனிபா ஆகியோர், 'இந்த நில பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், நிலம் எங்களுக்கானது என, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு உள்ளது.

எனவே, அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடி, நீதிமன்ற வழிகாட்டுதல் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்து அதற்கான நீதிமன்ற உத்தரவை வழங்கினர். இதனால், ஆக்கிரமிப்பை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட கலெக்டரிடம் இந்த தகவலை தெரிவித்து, அவரின் உத்தரவுப்படி, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us