/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ்சில் திடீரென ஏற்பட்ட புகை: விபத்து தவிர்ப்பு
/
அரசு பஸ்சில் திடீரென ஏற்பட்ட புகை: விபத்து தவிர்ப்பு
அரசு பஸ்சில் திடீரென ஏற்பட்ட புகை: விபத்து தவிர்ப்பு
அரசு பஸ்சில் திடீரென ஏற்பட்ட புகை: விபத்து தவிர்ப்பு
ADDED : மே 17, 2024 11:43 PM

கூடலுார்;கூடலுார் கோழிக்கோடு சாலையில் சென்ற அரசு பஸ்சில் திடீரென புகை ஏற்பட்டதை அறிந்த ஓட்டுனர், பஸ்சை நிறுத்தினார்; தீயுடன் புகை ஏற்பட்டபோது, தண்ணீர் ஊற்றி அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கூடலுாரில் இருந்து அரசு பஸ் பல பயணிகளுடன் நேற்று காலை, கோழிக்கோடு சாலை வழியாக கொளப்பள்ளி நோக்கி சென்றது. காலை, 7:00 மணிக்கு மரப்பாலம் அருகே, பஸ் சென்று கொண்டிருந்த போது, இன்ஜின் அருகே புகை வருவது அறிந்த, ஓட்டுனர் ஜெயகிருஷ்ணன், பஸ் நிறுத்தி பயணிகளை இறக்கினார்.
தொடர்ந்து, புகை வந்த பகுதியை ஆய்வு செய்த போது, இன்ஜினில் தீ ஏற்பட்டு புகை வருவது தெரிய வந்தது. அப்பகுதியில், தொடர்ந்து தீ ஏற்படாத வகையில், தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியை மேற்கொண்டார்.
அப்போது எதிரே வந்த, கேரளா அரசு பஸ் ஊழியர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு, தங்கள் பஸ்சில் இருந்த தீயணைக்கும் கருவியை பயன்படுத்தி தீயை அணைக்க உதவினர்.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கூடலுார் போக்குவரத்து கிளையிலிருந்து வந்த பணிமனை ஊழியர் ஊழியர், பஸ்சை ஆய்வு செய்ததில், 'பஸ்சில் 'சைலன்சர்' மீது வைக்கப்பட்டிருந்த வேஸ்ட் துணி, வெப்பம் காரணமாக புகைந்து எரிய துவங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது,' என, தெரிய வந்தது. அதன்பின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு பஸ் இயக்கப்பட்டது.

