/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடைகள் உணவுக்கான வைக்கோல் சமவெளி பகுதியிலிருந்து 'சப்ளை'
/
கால்நடைகள் உணவுக்கான வைக்கோல் சமவெளி பகுதியிலிருந்து 'சப்ளை'
கால்நடைகள் உணவுக்கான வைக்கோல் சமவெளி பகுதியிலிருந்து 'சப்ளை'
கால்நடைகள் உணவுக்கான வைக்கோல் சமவெளி பகுதியிலிருந்து 'சப்ளை'
ADDED : மே 13, 2024 11:54 PM

கூடலுார்:கூடலுார் சுற்றுப்புற பகுதிகளுக்கு, சமவெளி பகுதியில் இருந்து எடுத்து வரும் வைக்கோல் பயன்படுத்தி, கால்நடைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
கூடலுார் பகுதியில் நடப்பாண்டு வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், வனப்பகுதிதாவரங்கள், புற்கள் காய்ந்து பசுமை இழந்தன. வனவிலங்குகளுக்கு உணவு. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது.
விவசாயிகள், கால்நடைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். பால் உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், உலர்ந்த வைக்கோல் கட்டுகளை வாங்கி, கால்நடைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய துவங்கியுள்ளனர். கூடலூரில் நேரடியாக வைக்கோல் கிடைக்காததால், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் எடுத்து வரும், வைக்கோலை விவசாயிகள் கிலோ, ரூ.15 என்ற விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு கோடையில் வறட்சி காரணமாக, கால்நடைகள் உணவு தேவை பூர்த்தி செய்ய பசுந்தாவரங்கள் கிடைக்கவில்லை. இதனால், சமவெளி பகுதியில் இருந்து வியாபாரிகள் எடுத்து வரும் வைக்கோலை வாங்கி அவைகளின் உணவு தேவை பூர்த்தி செய்து வருகிறோம்.
'இதற்கு செலவும் அதிகரித்துள்ளது. எனவே, கோடை சீசன் முடியும் வரை, அரசு ஆவின் மூலம் இலவசமாக அல்லது மானிய விலையில் வைக்கோல் வழங்க வேண்டும்,' என்றனர்.

