/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
/
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:17 PM
ஊட்டி : தமிழ் வளர்ச்சி் துறை சார்பில் தலைவர்கள் பிறந்தநாள் பேச்சு போட்டியில் பங்கேற்க, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறை, ஆண்டுதோறும் மாவட்ட அளவில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளில் பேச்சுப்போட்டி நடத்தி பரிசு வழங்குகிறது.
அதன்படி, அம்பேத்கர் பிறந்த நாள் விழா தொடர்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஜூலை, 10ம் தேதி, ஊட்டி அரசு கலை கல்லுாரியில் பேச்சு போட்டிகள் தனித்தனியே நடத்தப்படுகிறது.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முறையே, முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் இருவரை தனியாக தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் மாணவர்களுக்கு இடையே, முதற்கட்டமாக முதல் சுற்று பேச்சு போட்டிகள் கீழ் நிலையில் நடத்தி, மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
மாவட்ட போட்டியில் பங்கேற்க, ooty tamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை, 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழா போட்டி
பள்ளி மாணவர்களுக்கு, 'சமூக தொண்டில் அம்பேத்கர்; சுயமரியாதையும் அம்பேத்கரும்; சட்ட மேதை அம்பேத்கர்,' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடக்க உள்ளது.
கல்லுார் மாணவர்களுக்கான, 'அரசியலமைப்பின் சிற்பி, அம்பேத்கரின் சீர்திருத்தச் சிந்தனை, அம்பேத்கர் கண்ட சமத்துவம்,' என்ற தலைப்பில் போட்டி நடக்கிறது.
போட்டி, காலை, 9:30 மணிக்கு தொடங்கும். இப்போட்டிகளில், பள்ளி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.