ADDED : ஜூலை 09, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு;தமிழகம், விழுப்புரம் மூப்பனூர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி, 40. இவர், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் கூலித்தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக காலை, 6:00 மணிக்கு பட்டாம்பி ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது, வெஸ்ட் கோஸ்ட் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து வந்த பட்டாம்பி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டாம்பி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர்.