/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
/
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
ADDED : மே 16, 2024 02:33 AM
ஊட்டி:நீலகிரியில், 73 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகின்றன. தினமும், 1.70 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. இந்நிலையில், ஊட்டி மார்க்கெட் ரவுண்டானா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களில் தண்ணீர்; போதை வஸ்துக்களை கலந்து விற்பனை செய்யப்படுவதாக, புகார் எழுந்தது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய டாஸ்மாக் அதிகாரிகள், மது விலக்கு போலீசார் கண்டுகொள்ளவில்லை. 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் சென்னை தலைமைக்கு புகார் சென்றது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி டாஸ்மாக் பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மதுபாட்டில்களில் தண்ணீர், போதை வஸ்துக்களை கலந்து விற்பனை செய்ததை உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து, 180 மி.லி., 360 மி.லி., 750 மி.லி என, 36 மது பாட்டில்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மேலும், டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர்கள் உமேஷ், சதீஷ், சேல்ஸ்மேன்கள் சிவக்குமார், மணி, சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.