/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை கிலோ ரூ.19.48 : தேயிலை வாரியம் நிர்ணயம்
/
பசுந்தேயிலை கிலோ ரூ.19.48 : தேயிலை வாரியம் நிர்ணயம்
பசுந்தேயிலை கிலோ ரூ.19.48 : தேயிலை வாரியம் நிர்ணயம்
பசுந்தேயிலை கிலோ ரூ.19.48 : தேயிலை வாரியம் நிர்ணயம்
ADDED : மார் 03, 2025 11:49 PM
குன்னுார்:
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோவிற்கு, 19.48 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் தேயிலை மையம் மற்றும் 'இன்கோசர்வ்' மையத்தில் வாரந்தோறும் தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது. தேயிலை துாளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில், பசுந்தேயிலைக்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி, நீலகிரியில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியான தேயிலை துாள், அந்தந்த மாதம் ஏலம் விடப்படுவதன் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலை விலையை, குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம், நிர்ணயம் செய்து வருகிறது.
தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார், ''தேயிலை 30 ஏ 5 (ஏ) பிரிவின் மார்க்கெட் கட்டுப்பாடு இரண்டாவது திருத்தம் அடிப்படையில், பிப்., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 19.48 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.