ADDED : மே 25, 2026 07:50 PM
கோத்தகிரி: கோத்தகிரி திம்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், திம்பட்டி விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை அலுவலர் கவின் பிரசாந்த் பங்கேற்று, தோட்டக்கலை துறை வாயிலாக செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பயிற்சியில், ஊட்டி உழவர் பயிற்சி நிலைய தோட்டக்கலை அலுவலர் ஐஸ்வர்யா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ‘அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையின் இன்றியமையாமை,’ குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், ‘வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் செயல்முறை,’ குறித்து எடுத்துரைத்தார்.
முன்னோடி விவசாயி ராமதாஸ், ‘அங்கக இடுப்பொருள்களான, ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை குறித்து, செயல்முறை,’ குறித்து விளக்கினார். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று அடைந்தனர்.
